என்னால் முடிந்த கவிதை!
நான் எழுதிய, பழைய பேப்பர்களை குடைந்த போது கிடைத்த, ஓரு "பழைய" கவிதை!
அறிவெனும் அற்புதத்தில்
செறிவதனைச் சேர்க்க, சாதி
வெறியதனை அழித்து, அனைவரும்
உறவென்பதை உணர்ந்து ---
பரிவெனும் முறை பயின்று
கரவெனும் இழிவைத் துறந்து,
மறமெனும் குணம் பெற்று, கலைத்
திறனதனை சிறக்கக் கற்று, அருள்
நெறியதனை ஏனோர்க்குப் புகட்டி ---
"குறையொன்றும் இல்லாதவனை"ப் போற்றி வாழ்தலே
சிறந்ததென சான்றோர் உரைப்பர்!
--- பாலா
1 மறுமொழிகள்:
This is a really stupid comment, but considering I can't read your post, your writing system is really beautiful (I didn't even know my computer supported that)...
Post a Comment